நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அதை அந்நாட்டவர்கள் எப்படி ரசிப்பார்கள்! என்கின்ற கற்பனைதான் “வாஷிங்டனில் திருமணம்” என்கின்ற கதைக்கு வித்தாக அமைந்தது.

ராக்ஃபெல்லர் அமெரிக்காவில் வாழும் மிகப் பெரிய பணக்காரர். அவரின் தங்கையும், அவரது கணவரும் மற்றும் அவர்களது மகள் லோரிட்டாவும், லோரிட்டாவின் தோழி வசந்தாவின் திருமணத்திற்காக தஞ்சாவூருக்கு வருகிறார்கள். வந்து தென்னிந்தியாவின் திருமண கோலாகலத்தை பார்த்து பிரமித்துப் போகிறார்க

அவர்கள் அமெரிக்கா திரும்பியதும், திருமதி ராக்ஃபெல்லரிடம் இதைப் பற்றி கதை கதையாக சொல்கிறார்கள். அதில் மயங்கிய ராக்ஃபெல்லர் தனது (பெரும்) செலவில் வாஷிங்டனில் அத்தகைய தமிழ் திருமணத்தை நடத்த முடிவு செய்கிறார். முடிவெடுத்தவுடனேயே பணத்தை தண்ணியாகி செலவு செய்தது வாஷிங்டனில் பிரமாண்டமான திருமணத்தை நடத்துகிறார்.

அதற்காக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை வாஷிங்டனுக்கு வரவழைக்கிறார். எண்ணிக்கையில்லா விமானங்கள் தினமும் சென்னைக்கும் வாஷிங்டனுக்கும், திருச்சிக்கும் வாஷிங்டனுக்கும் பறக்கின்றன. வெற்றிலை பாக்கில் இருந்து பூ, பழம், மூக்குப் பொடி என்று ஒரு சென்னை கடைத்தெருவே அமெரிக்காவுக்கு வரவழைக்கப்படுகிறது. சாஸ்திரிமார்கள் பலப்பேர் அமெரிக்காவிற்கு வந்தவுடன், ஜான்வாசத்தில் காஸ்லைட்டை தூக்க நரிக்குரூவார்கள் வருகிறார்கள், அவர்களைப் பார்த்து அமெரிக்க நாய்கள் குறைக்கவில்லை என்பதினால் ஆயிரம் நாய்களும் அமெரிக்காவிற்கு வரவழைக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான அப்பளங்கள் தயாரிக்க பாட்டிமார்கள் அமெரிக்கா வருகிறார்கள். அவர்கள் தங்கும் இடத்தில் இருந்து, இடும் அப்பளத்தை எடுத்துக் கொண்டு ஆர்ட் காலரி மாடியில் காய வைப்பதற்காக ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. கல்யாணத்தில் சம்பந்தி சண்டையும் நடக்கிறது, அதையும் ரசித்துப் பார்க்கிறார் ராக்ஃபெல்லார். சண்டை போடும் மாப்பிள்ளையின் மாமாவுக்கு கார் ஒன்றையும் பரிசாக தருகிறார்.
திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைத்து, மணமக்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி வாழ்த்துவதாக கதை முடிகிறது.

அமெரிக்கர்கள் இந்திய கலாசாரத்தில் கண்டு வியப்பதாகவும் வினோதமாக இருப்பதுதான் கதைக்களம். அமெரிக்காவே அந்த கல்யாணத்தை வாய் பிளந்து பார்க்கிறது. அமெரிக்க பத்திரிக்கைகள் நம்மூர்காரர்களின் நடவடிக்கை மற்றும் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்தை பெரிதுபடுத்தி எழுதுகிறார்கள். எள்ளில் இருந்து எண்ணெய் உருவாக்கியதாக இந்திய ஐயரை சயிண்டிஸ்ட் என நாளேடுகள் சித்தரிக்கிறார்கள்.

இக்கதையை வாஷிங்டனுக்குப் செல்லாமலே அங்கே உள்ள கட்டிடங்களையும், வீதிகளையும், பூங்காக்களையும் குறிப்பிட்டு ஒரு திருமணத்தைத் தொடராக எழுதி வாசகர்களைக் கிறங்க வைத்துள்ளார் சாவி. இன்றைய வாஷிங்டனில் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியாவில்லையெனினும் ஒரு 50 ஆண்டுகளுக்கு முந்தைய வாஷிங்டனில் இதை நடத்தி இருக்க முடியும் போல் தோன்றுகிறது. சில ஆரவங்கள் அதி்கமாகத் தெரிந்தாலும் கதையின் போக்கை அவை மாற்றவில்லை. 1960களில் ஆனந்த விகடனில் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற ஹாஸ்ய தொடர் தான் வாஷிங்டனில் திருமணம் என்ற 11 அத்தியாயங்களைக் கொண்ட நாவலை இன்றைக்குப் எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.

Read/Download this PDF Book