‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று விரிந்த உலகம் காண சித்த விஞ்ஞான நெறிகளை இந்த வியன் உலகுக்கு வழங்கினார் தமிழ் மகான்கள். அதுபோல் வட இந்தியாவில் குருநானக் என்பவரும் தமிழ்நாட்டு சித்தர்களைப் போல வாழ்ந்து காட்டி அங்குள்ள மக்களுக்கு சித்தாந்தங்களை போதித்திருக்கிறார்.

தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் தாள்வான்டி என்ற கிராமத்தில் 1496 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கார்த்திகை பௌர்ணமி நாளன்று குருநானக் பிறந்தார். அக்குழந்தைக்கு பெற்றோர்கள் நானக் என்று பெயரிட்டார்கள். குருநானக் இளம்வயதிலேயே இறையனுபவம் முற்றிலும் பெற்ற ஓர் ஒப்பற்ற ஞான யோகியாக வாழ்ந்துள்ளார்.

மக்களிடம் இருந்த தீண்டாமை மூடநம்பிக்கை கடுமையாக கண்டித்தார். மேலும் மனிதனாய் பிறந்தவர்கள் சாதி மதம் என்னும் பெயரில் பிரிந்து விடாமல் மனிதம் என்னும் ஓர் நிலையில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று உபதேசம் செய்தார். இறைவனை புறத்திலும் அகத்திலும் வழிபட்டு தனது யோக தவத்தின் வலிமையால் ஒழுக்க சாதனைகளும் பரம்பொருளை தம்முள் கண்டம் மகானாகவும் இறை ஞானம் நிறைந்த மகாத்மாவும் அவர் திகழ்ந்துள்ளார்.

தனக்கு வந்த துன்பம், நோய் ,அச்சம், வறுமை எல்லாவற்றையும் துச்சமாக தூக்கி எறிந்து விட்டு நாள்தோறும் மக்களுக்கு ஞானோபதேசம் செய்து ஊர் ஊராக நாடு நாடாக அலைந்து திரிந்து வாழ்க்கையின் ஞான விதிகளை மக்களது நெஞ்சங்களில் தூவி; புதியதொரு வாழ்வியல் மார்க்கத்தை மக்களுக்காக உருவாக்கி; அதன் வழியிலே அவர்களை நடக்க வைத்தவர் ஞானி குருநானக்.

குருநானக் வாழ்வில் பல நெடும் பயணங்கள் மேற்கொண்டார். திபெத், தென் இந்தியா, பூடான், பாக்தாத், மெக்கா, மதினா போன்ற பகுதிகளுக்கு சென்று பிரசங்கம் செய்தார். உதவி செய்வது, நேர்மையான வாழ்க்கை வாழ்வது, இறைவனின் நாமத்தை உச்சரிப்பது, கடவுளை தியானிப்பது, முன்னோர்களை மதிக்க வேண்டும் ஆகிய கொள்கைகளை கொள்கைகளை கடமையாக்கினார். அவரது போதனைகள் அனைத்தும்’ குருகிரந்த சாஹிப்’ என்னும் புனித நூலில் இடம்பெற்றுள்ளது. இவரது புதிய மார்க்கத்தை சீக்கியம் என்றார்கள். அந்த மதத்தைப் பின்பற்றியவர்கள் சீக்கியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

இறைஞான தொண்டர்களுக்கு இலக்கணமாய் திகழ்ந்த குருநானக் 1538 ஆம் ஆண்டில் எந்த விதமான நோய்களுக்கும் ஆளாகாமல் இயற்கை எய்தினார். தமிழ் சித்தர்கள் தவங்களை இயற்றி, யோகிகள் ஆக மாறி தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றவாறு ஆன்மீகத் தத்துவங்களை வளர்த்து மக்களுக்கு இறை ஞானத்தை போதித்தார்களோ, அதே போன்ற கொள்கைகளை, சித்தாந்தங்களை வட நாட்டு மக்களுக்கு கூறிட கடந்த இயற்றிய கர்ம யோகி குருநானக் சென்ற ஞானி பஞ்சாப் மாநில மக்கள் அவரை அவதார புருஷர் என்கிறார்கள்.

Read/Download this PDF Book