நம் அனைவருக்கும் பல ஆசைகளும் இலட்சியங்களும் நம்மோடு இருந்து கொண்டே இருக்கின்றன. சிலவற்றை நம்மால் நிறைவேற்ற முடிகிறது, சிலவற்றை நிறைவேற்ற முடிவதில்லை. காரணம் சில சமயங்களில் நாம் முயல்வதில்லை சில நேரங்களில் எப்படி முயல்வது என்று நமக்குத் தெரியவில்லை. அப்படி தெரியாத சூழ்நிலையில் நம்மையும் நம் முயற்சிகளையும் தரிசிக்க நாம் ஒன்று அறிவுரைகளுக்காக மனிதர்களை தேடுகிறோம் அல்லது நல்ல புத்தகங்களைத் தேடுகிறோம். அப்படி பல மாணவர்களை கரைசேர்க்கும் பயனுள்ள ஒரு நூலாக உருவெடுத்துள்ளது என்.குமரன் எழுதியுள்ள இந்த “துணியை துணை”” ஒரு புத்தகத்திற்கு தலைப்பு நல்லா இருந்தா புத்தகம் நல்லா இருக்கும் (வெகு குறைவான புத்தகங்களைத் தவிர) என்று நம்புபவர்களுக்கு இந்த புத்தகத்தின் தலைப்பே நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது.

மனித சமுதாயம் உள்ளளவும் வளர்ந்து கொண்டே இருக்கும் தகுதியைப் பெற்றிருக்கும் ஒரே துறை ஆடை தயாரிப்புத் துறை மட்டும்தான். ஆடை தயாரிப்புத் துறையில் மிகப் பெரும் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆடை அணிவதில் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. ஆனால் தற்சமயம் அப்படி இல்லை சமூக பொருளாதார நிலை பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒரே நாளில் பல்வேறு ஆடைகள் அணிய வேண்டி சூழ்நிலையும் தேவையும் தற்போது உள்ளது.

குறிப்பாக உடற்பயிற்சிக்கு, பின்பு அலுவலக பணிகளுக்கு, மாலையில், சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு மற்றும் ஓய்வு நேரத்தில் பயன்படுத்த என சராசரியாக ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு 3 முதல் 5 விதமான ஆடைகளை பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. இதுவே ஆடை தயாரிப்பு தொழில் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கான காரணம்.

பின்னலாடை தொழில் தோன்றியது மேற்குவங்காளம், அது பாதுகாப்பாக வளர்ந்தது லூதியானா. ஆனால், தமிழகத்தின் சிறிய கிராமமாக இருந்த திருப்பூரில் இருந்துதான் 55 சதவிகிதம் பின்னலாடை ஏற்றுமதி ஆகிறது. திருப்பூரில் பின்னலாடை துறைக்கு தேவையான நூற்பாலைகளும், துணி தயாரிக்கும் தொழிலகங்களும் உண்டு. சாயப்பட்டறைகள், ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் என்று போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இங்கு இருக்கின்றன.

பின்னலாடைத் துறையின் உள்நாட்டு ஒட்டுமொத்த தயாரிப்பில் திருப்பூரில் பங்களிப்பு 50 முதல் 55 சதவிகிதம். இதனாலேயே இந்தியாவின் பின்னலாடை தலைநகராக திருப்பூர் உள்ளது என்றால் அது மிகையாகாது. மிக அடிப்படை வேலையில் சேர்ந்து பின் படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளராக உருவானவர்கள் தான் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள். நேற்றைய தொழிலாளர்கள் நாளைய முதலாளிகள் என்பது இத்துறையில் மட்டும்தான் சாத்தியம்.

இங்கு, பல்வேறு தளங்களில் பணிபுரிய பணியாளர்கள் பற்றாக்குறை தான் பெரும் சவாலாக இருக்கிறது. அதைப் போக்கும் முயற்சியாக தொழில் போட்டியாளர்கள் ஒன்றுசேர்ந்து NIFT TEA கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. எனவே இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் இளைஞர்கள் இத்துறை சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்தி படித்தால் வேலைவாய்ப்பும் தொழில் வாய்ப்புகள் குவிந்து கிடப்பதை அறிய முடியும்.

NIFT TEA கல்லூரியின் பட்டய படிப்புகளுக்கான விளக்கம்

 1. B.SC Garment Designing and Production
 2. B.SC Apparel Manufacturing and Merchandising
 3. B.SC Apparel Production Technology
 4. B.SC Apparel Fashion Design
 5. B.SC Fashion Apparel Management
 6. B.SC Costume Design and Fashion
 7. B.B.A International Business

துணிவே துணை புத்தகத்தின் சில பொருளடக்கம்

 1. படிக்கும் போதே வேலை வாய்ப்பு அசத்தும் ஆடை வடிவமைப்பு கல்லூரி
 2. NIFT TEA knitwear Fashion Institute
 3. ஆராய்ச்சி படிப்புகள் M.Phil and PHD
 4. கல்விக் கடன்
 5. கட்டிங் வேஸ்ட் துணிகளில் ஆடை தயாரிக்கும் மாணவி
 6. ஆடை தயாரிப்பு துறையில் பணியாற்ற இலவச திறன் பயிற்சிகள்
 7. திறமையை வெளிப்படுத்தும் Fashion Show
 8. துப்புரவு தொழிலாளர்களுக்கான சிறப்பு ஆடை
 9. வாயிற் கதவை வந்து தட்டும் வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள்
 10. படித்தால் அல்ல … படிக்கும்போதே வேலை
 11. இன்றைய தொழிலாளி… நாளைய முதலாளி
 12. அசுர வளர்ச்சியில் ஆடைத் தொழில்
 13. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச அங்கீகாரங்கள்

திருப்பூரில் எத்தனையோ வருடங்களாக பல சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் பல வருடங்களாக அந்த தொழில் நிறுவனங்கள் தேக்க நிலையில் இருந்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. ஏனெனில் புது விதமான வாய்ப்புகள் மற்றும் நடப்பு தொழில்நுட்பங்களை பற்றி அவர்கள் அறிவதில்லை. துணியை துணை என்னும் இந்நூல் அனைத்து விதமான வாய்ப்புகளையும், தொழில்நுட்பங்களை பற்றியும் தெள்ளத் தெளிவாய் எடுத்துரைக்கிறது. தொய்வு அடைந்த தொழில் முனைவோர் தங்களது தொழிற்சாலைகளை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்ல இந்நூல் பேருதவியாக அமையும்.

Rs.190 மதிப்புள்ள இந்நூல் Read2Book மட்டும் RS.160 கிடைக்கிறது. இப்புத்தகத்தை வாங்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Buy Now